/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'டேட்டிங் ஆப்'பில் பழகிய வாலிபரை கட்டிப்போட்டு பணம் பறித்த கும்பல் 'டேட்டிங் ஆப்'பில் பழகிய வாலிபரை கட்டிப்போட்டு பணம் பறித்த கும்பல்
'டேட்டிங் ஆப்'பில் பழகிய வாலிபரை கட்டிப்போட்டு பணம் பறித்த கும்பல்
'டேட்டிங் ஆப்'பில் பழகிய வாலிபரை கட்டிப்போட்டு பணம் பறித்த கும்பல்
'டேட்டிங் ஆப்'பில் பழகிய வாலிபரை கட்டிப்போட்டு பணம் பறித்த கும்பல்
ADDED : ஜூன் 25, 2024 11:43 PM

சென்னை, கே.கே.நகர், ராஜமன்னார் சாலை, நவரத்தின காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 25. இவர், சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிகிறார்.
இவருக்கு மொபைல் போனில் 'டேட்டிங்' செயலி வாயிலாக, மாதவன் என்பவர் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி, சுரேஷை பார்க்க வேண்டும் என, மாதவன் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாதவன் கூறியபடி, வடபழனி முருகன் கோவில் குளம் அருகே உள்ள வீட்டிற்கு சுரேஷ் சென்றார். அங்கு மாதவனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த எட்டு பேர், மாதவனுடன் சேர்ந்து சுரேஷை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். பின், 'ஜிபே' வாயிலாக, அவரது வங்கி கணக்கில் இருந்த 27,000 ரூபாய், இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறித்தனர்.
மேலும், சுரேஷை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இது குறித்து வெளியே கூறினால், 'சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்' என, மிரட்டி அனுப்பி உள்ளனர்.
பயந்துபோன சுரேஷ் புகார் அளிக்காமல் இருந்தார். இதே போன்ற சம்பவத்தில். போலீசார் சிலரை கைது செய்த சம்பவம் அறிந்து, சுதாரித்த சுரேஷ் இரு தினங்களுக்கு முன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த வடபழனி போலீசார், கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மாதவன், 21, வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்ற லோகு, 20, பக்தவச்சலம் தெருவைச் சேர்ந்த பரத்குமார், 21, மற்றும் 16 வயது இளஞ்சிறார் என, 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதில், மாதவன் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கஞ்சா வழக்கும், இம்ரான் மீது ஒரு 'போக்சோ' மற்றும் இரு திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
மேலும், தலைமறைவாக உள்ள ஷாம், இம்மானுவேல், தமிம் அன்சாரி, தஜ்ஜூதின் ஆகிய நான்கு நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல, எத்தனை பேரிடம் இந்த கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது என விசாரிக்கின்றனர்.