/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தார்ச்சாலைக்கு காத்திருக்கும் தரைப்பாலம் தார்ச்சாலைக்கு காத்திருக்கும் தரைப்பாலம்
தார்ச்சாலைக்கு காத்திருக்கும் தரைப்பாலம்
தார்ச்சாலைக்கு காத்திருக்கும் தரைப்பாலம்
தார்ச்சாலைக்கு காத்திருக்கும் தரைப்பாலம்
ADDED : ஜூன் 29, 2024 11:09 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர்கிராமத்திற்கு செல்லும் சாலை குறுக்கே, விருதசீர நதியை கடந்து செல்கிறது.
இந்நதி குறுக்கே, கடந்த புயலின் போது, தரைப்பாலம் அரிப்பு ஏற்பட்டு, பாதை சேதம் ஏற்பட்டு இருந்தது.
நெடுஞ்சாலைத் துறையினரும், தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைத்து, வாகனங்கள் செல்வதற்குஏற்ப மண் பாதைஉருவாக்கி இருந்தனர்.
இதையடுத்து,விருதசீர நதி குறுக்கே தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து, கான்கிரீட் தளம் போட்டு சாலை போட்டனர். அதன் மீது ஜல்லி கொட்டி சமப்படுத்தினர்; ஆனால்,தார்ச்சாலை போடவில்லை.
சமீபத்தில் பெய்த மழையால், தண்ணீர் தேங்கி ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில், இருசக்கரவாகனம் மற்றும் பிறவாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளன.
சைக்கிளில் செல்வோர், நிலை தடுமாறி ஜல்லிக்கற்கள் மீது விழுந்து செல்ல வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளூர்- - திருமால்பூர் இடையே, விருத சீர நதி குறுக்கே தரைப் பாலத்தின் மீது, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.