/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போலீஸ் நிலைய வாசலில் அறுந்து விழுந்த மின்கம்பி போலீஸ் நிலைய வாசலில் அறுந்து விழுந்த மின்கம்பி
போலீஸ் நிலைய வாசலில் அறுந்து விழுந்த மின்கம்பி
போலீஸ் நிலைய வாசலில் அறுந்து விழுந்த மின்கம்பி
போலீஸ் நிலைய வாசலில் அறுந்து விழுந்த மின்கம்பி
ADDED : ஜூன் 11, 2024 01:47 AM

ஸ்ரீபெரும்புதுார் : சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் போலீஸ் நிலையம் உள்ளது. ஒரே வளாகத்தில், ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகின்றன.
இதனால், இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில், போலீஸ் நிலையம் வாசல் முன், மின் கம்பங்கள் வழியே செல்லும் மின் வழிதடத்தில், நேற்று காலை திடீரென இரண்டு மின் கம்பிகள் அறுந்து, போலீஸ் நிலையம் வாசலின் முன் விழுந்தது.
தீப்பொறியுடன் மின்கம்பி அறுந்து விழுவதை கண்ட, போலீசார் மற்றும் புகார் அளிக்கவந்த பொதுக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசார், மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு மின்சாரத்தை துண்டித்து, அறுந்து விழுந்த மின் கம்பியை, மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது:
போலீஸ் நியைலம் எதிரே செல்லும் மின் கம்பியில், ஒரு மின் கம்பத்திற்கும் மற்றொரு கம்பத்திற்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. இதனால், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதுடன், அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு மின் கம்பத்திற்கு மத்தியில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
எனவே, போலீஸ் நிலையம் முன் புதிய மின்கம்பம் அமைத்து, தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க, மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.