/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 5 வயது சிறுவன் முகத்தை கடித்து குதறிய தெருநாய் 5 வயது சிறுவன் முகத்தை கடித்து குதறிய தெருநாய்
5 வயது சிறுவன் முகத்தை கடித்து குதறிய தெருநாய்
5 வயது சிறுவன் முகத்தை கடித்து குதறிய தெருநாய்
5 வயது சிறுவன் முகத்தை கடித்து குதறிய தெருநாய்
ADDED : ஜூன் 28, 2024 02:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது 5 வயது மகன் நிர்மல்ராஜ் நேற்று, வீட்டின் பின்புறம் விளையாடி உள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த தெருநாய், சிறுவனின் முகத்தை கடித்துக் குதறியுள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நாயை துரத்த முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, பாலாஜியின் கை மற்றும் காலிலும் நாய் கடித்துள்ளது. பின், ஒருவழியாக நாயை விரட்டிவிட்டு, குழந்தையை மீட்ட பாலாஜி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனை நாய் கடித்த சம்பவம், கணபதிபுரத்தில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.