/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநில செஸ் போட்டி; 670 சிறுவர்கள் பங்கேற்பு மாநில செஸ் போட்டி; 670 சிறுவர்கள் பங்கேற்பு
மாநில செஸ் போட்டி; 670 சிறுவர்கள் பங்கேற்பு
மாநில செஸ் போட்டி; 670 சிறுவர்கள் பங்கேற்பு
மாநில செஸ் போட்டி; 670 சிறுவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 22, 2024 01:05 AM

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில், நேற்று நடந்த சிறுவர் - சிறுமியருக்கான மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டியில், மொத்தம் 670 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், சிறுவர் - சிறுமியருக்கான மாநில அளவிலான ஒரு நாள் சதுரங்க போட்டி, நேற்று காலை துவங்கியது.
சென்னை அடுத்த ஆவடி வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில், பிடே விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடந்தன.
இதில், இருபாலரிலும் 8, 10, 12, 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பெரியவர்கள் என, தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
மாநிலம் முழுதும், பல்வேறு மாவட்டகளைச் சேர்ந்த 670 வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு ஏழு சுற்றுகள், பெண்களுக்கு ஆறு சுற்றுகள் என, போட்டிகள் நடந்தன.
இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற சிறுவர் - சிறுமியருக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.