/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேகமாக வறண்டு வரும் உத்திரமேரூர் ஏரி பாசனத்தை நம்பி 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள் வேகமாக வறண்டு வரும் உத்திரமேரூர் ஏரி பாசனத்தை நம்பி 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள்
வேகமாக வறண்டு வரும் உத்திரமேரூர் ஏரி பாசனத்தை நம்பி 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள்
வேகமாக வறண்டு வரும் உத்திரமேரூர் ஏரி பாசனத்தை நம்பி 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள்
வேகமாக வறண்டு வரும் உத்திரமேரூர் ஏரி பாசனத்தை நம்பி 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள்
ADDED : ஜூலை 16, 2024 01:14 AM

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், நந்திவர்ம பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்ட இந்த ஏரிக்கு வைரமேகன் தடாகம் என மற்றொரு பெயரும் உள்ளது.
இந்த ஏரி, 20 அடி ஆழம் கொள்ளளவு கொண்டது. மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரை கொண்டு ஏரிக்கான 18 மதகுகள் வழியாக வேடபாளையம், மேனலுார், அரசாணிமங்கலம், காட்டுப்பாக்கம், காக்கநல்லுார், புலியூர், நல்லுார் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
கடந்த ஆண்டு பருவ மழைக்கு உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை மழை போதுமான அளவு பெய்யாததையடுத்து, தற்போது உத்திரமேரூர் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
ஏரியின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குறைவான தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அத்தண்ணீரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வலைகள் மூலம் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.