/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல் கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்
கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்
கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்
கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்
ADDED : ஜூன் 07, 2024 12:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 634 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 414 முழு நேர ரேஷன் கடைகளும், 220 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன.
கடந்த, 2016 ஆகஸ்ட் மாதம் முதல், மின்னணு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, 2019 அக்டோபர் மாதம் முதல் கைரேகை பதிவு மூலம், இந்த இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 46 முழு நேர ரேஷன் கடைகளிலும், குன்றத்துார் தாலுகாவில் 29 கடைகளிலும், பொதுமக்களின் கருவிழி பதிவு செய்யும் முறை சோதனை முறையில் நடைபெற்று வந்தது.
இதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 339 முழு நேர ரேஷன் கடைகளிலும், கருவிழி பதிவு செய்யும் முறை துவங்க உள்ளதை முன்னிட்டு, கருவிழி இயந்திர வசதி பொருத்தப்பட்ட, மின்னணு இயந்திரங்களை, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.
கருவிழி பதிவு செய்யும் முறை மூலம், ரேஷன் கடைகளில் போலி பட்டியல்கள் வாயிலாக உணவு பொருட்கள் வெளி நபர்களுக்கு வழங்குவது தடுக்கப்படுவதோடு, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.