/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எம்.டி.சி., ஊழியர்களுக்கு வரும் 17ல் தடகள போட்டி எம்.டி.சி., ஊழியர்களுக்கு வரும் 17ல் தடகள போட்டி
எம்.டி.சி., ஊழியர்களுக்கு வரும் 17ல் தடகள போட்டி
எம்.டி.சி., ஊழியர்களுக்கு வரும் 17ல் தடகள போட்டி
எம்.டி.சி., ஊழியர்களுக்கு வரும் 17ல் தடகள போட்டி
ADDED : ஜூலை 15, 2024 06:11 AM
சென்னை : சுதந்திர தினத்தையொட்டி, மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு, வரும் 17ம் தேதி தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், வட்டெறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியாக ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், வரும் 17ம் தேதி காலை 7:30 முதல் நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.