/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் தொடர் மழை எதிரொலி 119 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின காஞ்சியில் தொடர் மழை எதிரொலி 119 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின
காஞ்சியில் தொடர் மழை எதிரொலி 119 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின
காஞ்சியில் தொடர் மழை எதிரொலி 119 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின
காஞ்சியில் தொடர் மழை எதிரொலி 119 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பின
ADDED : ஜூலை 19, 2024 04:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜூலை மாதம் துவக்கத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அன்றாடம் மழை பெய்வதால், இயல்பை காட்டிலும் அதிக மழை பொழிந்திருப்பதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஓராண்டுக்கு, 127.7 செ.மீ., மழை இயல்பாக பொழிய வேண்டும். இதுவரை, 30.4 செ.மீ., மழை பொழிந்துள்ளது. தொடர்ந்து மழை பொழிவதால், ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 381 ஏரிகளும் என, 761 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில், ஜூன் மாத கணக்கெடுப்பின்போது, உத்திரமேரூர் பெரிய ஏரி மட்டுமே, 75 சதவீதம் நிரம்பியிருந்தது.
ஜூலை மாத கணக்கெடுப்பில், ஏராளமான ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 45 ஏரிகளும், நீர்வளத்துறை சார்பில் 74 ஏரிகளும் என, 119 ஏரிகள், 75 சதவீதம் நிரம்பியுள்ளன.
அதேபோல், 146 ஏரிகள் 50 சதவீதமும், 156 ஏரிகள் 25 சதவீதமும், 340 ஏரிகள் 25 சதவீதம் கீழாகவும் நீர் இருப்பு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.