/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மஞ்சள் நீராட்டுக்கு மறுநாள் இளம்பெண் தற்கொலை மஞ்சள் நீராட்டுக்கு மறுநாள் இளம்பெண் தற்கொலை
மஞ்சள் நீராட்டுக்கு மறுநாள் இளம்பெண் தற்கொலை
மஞ்சள் நீராட்டுக்கு மறுநாள் இளம்பெண் தற்கொலை
மஞ்சள் நீராட்டுக்கு மறுநாள் இளம்பெண் தற்கொலை
ADDED : செப் 01, 2025 01:10 AM
ரிஷிவந்தியம் : லா.கூடலுாரில் திருமணம் குறித்து பெற்றோர் பேசியதால் வருத்தமடைந்த இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணாபுரம் அடுத்த லா.கூடலுாரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் மாணிக்கவள்ளி,18; பிளஸ் 2 முடித்துள்ளார்.
இவருக்கு கடந்த 28ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்த நிலையில், திருமணம் செய்வது தொடர்பாக உறவினர்களும், பெற்றோர்களும் பேசினர்.
இதனால் வருத்தமடைந்த மாணிக்கவள்ளி 29ம் தேதி காலை வீட்டில் துாக்கில் தொங்கினார். அவரது குடும்பத்தினர் மாணிக்கவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இதையடுத்து மாணிக்கவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.