ADDED : பிப் 23, 2024 10:21 PM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு மகள் கல்பனா, 18; தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.