Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

ADDED : செப் 02, 2025 10:08 PM


Google News
கள்ளக்குறிச்சி; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற வரும் அக்., 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது. தீபாவளி மட்டுமின்றி இதர முக்கிய பண்டிகைகளுக்கும் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெறுவதற்கு ஆண்டு முழுவதும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் கோரும் இடத்தின் அரசல் வரைபடம், இடத்தின் உரிமையாளராக இருப்பின் பத்திர நகல், வாடகை கட்டடமெனில் கட்டட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமம் கட்டணம் ரூ. 600 உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்து சீட்டு, மனுதாரரின் முகவரி ஆதாரம், வீட்டு வரி ரசீது, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சேவை கட்டணம் ரூ.500 உள்ளிட்ட ஆணவங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம், வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது. தீபவாளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக வெடி பொருள் உரிமம் பெற அக்., 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us