/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா
ADDED : செப் 16, 2025 11:41 PM

திருக்கோவிலுார்; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருக்கோவிலுார் உறைவிட நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் சவுந்தர் தலைமை தாங்கினார். ஆசிரியர் வனஜா வரவேற்றார். அறிவியலில் இருந்து உலகளாவிய செயல்பாடு என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவியல் இயக்க கருத்தாளர் ஜானகிராமன் விளக்க உரையாற்றினார்.
ஓசோன் குறித்து மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சோனியா, ஆரோக்கியமேல்சி செய்திருந்தனர்.