ADDED : ஜன 12, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி : ஏமப்பேரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூட்டை துாக்கும் தொழிலாளி இறந்தார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரைச் சேர்ந்தவர் முனியன் மகன் கோவிந்தன், 39; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர், கடந்த 11ம் தேதி இரவு 11:30 மணியளவில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் சென்றார்.
ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்ற போது, அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.