/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது
பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது
பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது
பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது
ADDED : ஜூன் 01, 2025 04:26 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
ஆண்டுதோறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதியானவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி, தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி வாய்ந்தவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிரதியை உரிய சான்றுகளுடன் இணைத்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும்,16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.