ADDED : ஜூன் 12, 2025 12:36 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே இரு பிள்ளைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி சசிகலா,30; இவர்களுக்கு சுதிக்ஷன்,8; என்ற மகனும், வசந்தி,6; என்ற மகளும் உள்ளனர்.
அதேபகுதியில் இட்லி மாவு அரைக்கும் ஆலையில் சசிகலா வேலை செய்து வந்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு செல்லாமல், இரு பிள்ளைகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் வராததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.