/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நான்கு குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை நான்கு குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
நான்கு குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
நான்கு குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
நான்கு குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : ஜன 08, 2025 05:25 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார்,33; இவரது மனைவி ஆதிலட்சுமி,30; இவர்களுக்கு இந்துமதி,13; கிருத்திகா,11; சுருதிகா,8; பரவேஷ்,6; ஆகிய ௪ பிள்ளைகள் உள்ளனர்.
பெங்களூரில் விஜயகுமார் மட்டும் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஆதிலட்சுமி தனது நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த டிச.,14ம் தேதி காலை 7.30 மணிக்கு தனது நான்கு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற ஆதிலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக விஜயகுமாருக்கு அவரது உறவினர்கள் மொபைலில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த விஜயகுமார் ஊருக்கு வந்த பல இடங்களில் தேடி விசாரித்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பிள்ளைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.