Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஜெ.ஜெ., வடிவ தண்ணீர் தொட்டி சீரமைக்கப்படுமா

ஜெ.ஜெ., வடிவ தண்ணீர் தொட்டி சீரமைக்கப்படுமா

ஜெ.ஜெ., வடிவ தண்ணீர் தொட்டி சீரமைக்கப்படுமா

ஜெ.ஜெ., வடிவ தண்ணீர் தொட்டி சீரமைக்கப்படுமா

ADDED : மார் 18, 2025 04:21 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வானவரெட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி உள்ளது.

இங்கு மான், குரங்கு, முயல் போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. வன விலங்குளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிக்குள் பல இடங்களில் குட்டை வெட்டி வைக்கப்பட்டுள்ளன.

கோடை காலங்களில் குட்டைகளில் தண்ணீர் வற்றி விடும்போது மான்கள், குரங்குகள் வயல் வெளி, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றது. அதுபோல் இடம் பெயறும் வன விலங்குகள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தும், படுகாயமடைகின்றன. அப்போது, சமூக விரோதிகள் மான்களை வேட்டியாடுகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்கு வானவரெட்டி வன பகுதியில் ஜெ.ஜெ., வடிவில் 2 அடி ஆழத்திற்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

கோடை காலங்களில் இதில், நீர் நிரப்பி, கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் வானவரெட்டி ஜெ.ஜெ., தண்ணீர் தொட்டியை சீரமைத்து தினந்தோறும்தண்ணீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us