/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வடதொரசலுார் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா? வடதொரசலுார் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
வடதொரசலுார் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
வடதொரசலுார் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
வடதொரசலுார் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 05, 2025 03:30 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே வடதொரசலுார் கூட் ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
தியாகதுருகம் அடுத்த வடைதொரசலுார் அருகே திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலுார் செல்லும் சாலை பிரியும் கூட்ரோடு அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் கூட்ரோட்டில் உணவு மற்றும் டீ அருந்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் இரவு நேரத்தில், அதிக வாகனங்கள் நின்று செல்கின்றன. போதிய வெளிச்சமின்றி பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடைகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் கூட்ரோட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.