/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது எப்போது?: மத்திய, மாநில அரசுகளின் போட்டியால் இழுபறிகாட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது எப்போது?: மத்திய, மாநில அரசுகளின் போட்டியால் இழுபறி
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது எப்போது?: மத்திய, மாநில அரசுகளின் போட்டியால் இழுபறி
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது எப்போது?: மத்திய, மாநில அரசுகளின் போட்டியால் இழுபறி
காட்டுசெல்லுார் துணை மின் நிலைய பணி துவங்குவது எப்போது?: மத்திய, மாநில அரசுகளின் போட்டியால் இழுபறி
ADDED : ஜூலை 16, 2024 07:22 AM
திருக்கோவிலுார்ஜி.அரியூர் சுற்று வட்டார கிராமங்களில் நிலவும் தாழ்வழுத்த மின்வினியோகத்தை சீரமைக்க காட்டுசெல்லுார் துணை மின் நிலைய திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜி.அரியூர், மேமாளூர், செங்கனாங்கொல்லை, பொன்னியந்தல், ரிஷிவந்தியம், காட்டுசெல்லுார் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளுக்கு திருக்கோவிலுார் மற்றும் தியாகதுருகம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் இருந்து இக்கிராமங்கள் வெகு துாரத்தில் உள்ளன. இதனால், இப்பகுதிகளுக்கு தாழ்வழுத்த மின்விநியோகம் கிடைக்கிறது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் அவ்வப்போது பழுதடைவதுடன், விவசாய மின் மோட்டார்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
எனவே, செங்கனாங்கொல்லையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்களின் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செங்கனாங்கொல்லையில் 2 ஏக்கர் நிலம் முறைப்படி மின் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், காட்டுசெல்லுார் துணை மின் நிலையம் என்ற பெயரில், 10 எம்.வி.ஏ., திறன் கொண்ட 2 டிரான்ஸ்பார்மர் பொருத்தி, துணை மின் நிலையம் அமைக்க மின் வாரியத்தால் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்திற்கு 10 முதல் 15 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.
இச்சூழலில் மத்திய அரசின் ரிவாப்டு டிஸ்ட்ரிபியூஷன் செக்டார் ஸ்கீம் திட்டத்தில் செயல்படுத்த மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு பணியை முடித்தால் மட்டுமே அதற்கான நிதி ஒதுக்கப்படும் என காலம் கடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், மத்திய அரசால் மின் வாரியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தப்படாததால், மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென மாநில அரசாலும், மத்திய அரசை வலியுறுத்த முடியாத சூழலில்தான், இத்திட்டம் கிடப்பில் உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஜி.அரியூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் திருக்கோவிலுார் பகுதியிலும் கூடுதல் மின் தேவை ஏற்பட்டிருப்பதால் காட்டுசெல்லுார் துணைமின் நிலையம் அத்தியாவசியமாகியுள்ளது.
எனவே, மாநில அரசு, மத்திய அரசை காரணம் கூறாமல், இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி துணை மின் நிலையம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.