Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுவது... எப்போது?; அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுவது... எப்போது?; அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுவது... எப்போது?; அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுவது... எப்போது?; அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 28, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னதாக, ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல் மணிலா, உளுந்து உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் கோமுகி, மணிமுக்தா அணைகள், 335 ஏரிகள் மற்றும் கோமுகி, மணிமுக்தா, கெடிலம் ஆகிய 3 ஆறுகள் உள்ளன.

முக்கிய நீர் ஆதாரம்


இதில் கோமுகி, மணிமுக்தா அணைகள் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் பஞ்சாயத்திற்குபட்பட்டு 380 ஏரிகள் உள்ளன. இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி, 50 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவிற்கு மேலான விவசாய நிலங்கள் உள்ளன.

பருவ மழை காலங்களில் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தொடர் மழையின் போது, அணைகள் நிரம்பியவுடன் பாதுகாப்பு கருதி ெஷட்டர்கள் திறந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.

அத்தருணத்தில் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும்போது, அங்குள்ள கால்வாயிலிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன.

ஆக்கிரமிப்பால் சிக்கல்


இந்நிலையில், தற்போது பெரும்பாலான ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்களில், அதிகளவில் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.

அதேபோல் பல இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளன. இதனால் பருவ மழையின் போது நீர் வரத்து கால்வாய்கள் மூலம், ஏரிகளுக்கு விரைவாக தண்ணீர் சென்று நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறைகேட்பு கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏரிகளின் நீர் வரத்து கால்வாய், உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கின்றனர். ஆனால் அதன் பிறகு நடவடிக்கை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவது கிடையாது என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் நீர் வரத்து கால்வாய்களை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைய உள்ள நிலையில் மாவட் டத்தில் பொதுப் பணித்துறை, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ஏரிகளின் நீர் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணிகள் மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us