/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்பில் மீம்ஸ்' அ.தி.மு.க., பிரமுகர் கைதை கண்டித்து மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்புதி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்பில் மீம்ஸ்' அ.தி.மு.க., பிரமுகர் கைதை கண்டித்து மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
தி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்பில் மீம்ஸ்' அ.தி.மு.க., பிரமுகர் கைதை கண்டித்து மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
தி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்பில் மீம்ஸ்' அ.தி.மு.க., பிரமுகர் கைதை கண்டித்து மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
தி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்பில் மீம்ஸ்' அ.தி.மு.க., பிரமுகர் கைதை கண்டித்து மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
ADDED : ஜன 07, 2024 05:51 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் மீம்ஸ் பதிவிட்ட அ.தி.மு.க.. பிரமுகரை கைது செய்த போலீசாரை கண்டித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்தவர் தி.மு.க., வார்டு செயலாளர் மணவாளன், 50; இவர் 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து மீம்ஸ் பதிவிட்டார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க., வார்டு செயலாளர் திவாகர், 35; , தி.மு.க., குறித்து 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டார்.
இதனால், இருவருக்கும் இடையே கட்சி சார்பில் 'வாட்ஸ் ஆப்'பில் காரசாரமான பதிவுகள் வெளியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிடாகம் தி.மு.க., ஊராட்சி தலைவர் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து திவாகரை கைது செய்தனர்.
இதனை அறிந்த அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிராஜ், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் முன் காலை 11:000 மணியளவில் திரண்டனர்.
வழக்கிலிருந்து திவாகரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் மறுத்ததால், ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் நேற்று மதியம் 1:00 மணியளவில் காவல் நிலையம் முன் போலீசாரின் போக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 68 பேரை கைது செய்தனர்.