/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இ.பி.எஸ்., சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது: அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தி இ.பி.எஸ்., சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது: அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தி
இ.பி.எஸ்., சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது: அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தி
இ.பி.எஸ்., சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது: அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தி
இ.பி.எஸ்., சொந்த மாவட்டத்தில் ஓட்டுகள் குறைந்தது: அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தி
ADDED : ஜூன் 05, 2024 11:15 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதிகளை விட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. இது அ.தி.மு.க.,வினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், இரு தொகுதிகள் தி.மு.க., வசமும் உள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவில் 6 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., கூடுதலான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.
தி.மு.க., மலையரசன் 5 லட்சத்து 61 ஆயிரத்து 589 ஓட்டுகள், அ.தி.மு.க., குமருகுரு 5 லட்சத்து 7 ஆயிரத்து 805 ஓட்டுகள் பெற்றனர். மலையரசன் 53 ஆயிரத்து 784 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக பெற்ற ஓட்டுகளில் ரிஷிவந்தியம் தி.மு.க., - 98,212, அ.தி.மு.க.,- 87,092 பெற்ற நிலையில் தி.மு.க., கூடுதலாக 11,120 ஓட்டுகள் பெற்றது. சங்கராபுரம் தி.மு.க., - 95,829, அ.தி.மு.க., - 87,539 என கூடுதலாக 8,290 ஓட்டுகளும், கள்ளக்குறிச்சியில் தி.மு.க., 1,00,636, அ.தி.மு.க.,-95,946 என கூடுதலாக 4,690 ஓட்டுகள் பெற்றது.
அதேபோல் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின், சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி சட்டசபை தொகுதியில் தி.மு.க.,-77,483, அ.தி.மு.க., 72,235 பெற்ற நிலையில் தி.மு.க., கூடுதலாக 5,248 ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆத்துார் தொகுதியில் தி.மு.க.,-85,579, அ.தி.மு.க.,-72,465 என, கூடுதலாக 13,114 ஓட்டுகளும், ஏற்காடு தொகுதியில் தி.மு.க.,-1,00,607, அ.தி.மு.க., 90,300 என கூடுதலாக 10,307 ஓட்டுகள் பெற்றது. தபால் ஓட்டுகளில் தி.மு.க.,-3243 ஓட்டுகள், அ.தி.மு.க.,-2228 ஓட்டுகள் பெற்றுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான இளங்கோவன், அங்குள்ள மூன்று சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணிகளின் முழு பொறுப்புகளையும் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்தாலும், சேலம் மாவட்ட தொகுதிகளில் பெறும் கூடுதலான ஓட்டுகள் அதனை ஈடு செய்யும் என்பதே அ.தி.மு.க.,வினரின் அதீத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விட, சேலம் மாவட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., கூடுதலான ஓட்டுகள் பெற்றுள்ளது அ.தி.மு.க.,வினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.