/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறந்த கல்வியை போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா சிறந்த கல்வியை போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா
சிறந்த கல்வியை போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா
சிறந்த கல்வியை போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா
சிறந்த கல்வியை போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா
ADDED : மே 24, 2025 11:57 PM

திருக்கோவிலுார், மணபூண்டியில் கல்விப் பணியில் பெற்றோர்களின் கனவை நனவாக்கும் தரம் மிகுந்த பள்ளியாக விவேகானந்தா வித்யாலயா செயல்படுகிறது.
இதுகுறித்து பள்ளி தாளாளர் முருகன் கூறியதாவது:
விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி 1995ம் ஆண்டு துவங்கப்பட்டது. பள்ளியின் சிறப்பான செயல்பாட்டை அறிந்த பெற்றோர்களின் தொடர் ஆதரவால், இன்று மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக வளர்ந்துள்ளது.
மாணவர்களுக்கு எந்த அளவிற்கு கல்வி முக்கியமோ, அதே அளவிற்கு ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் அவசியம். இத்துடன் உயர் கல்விக்கான ஆலோசனையும் வழங்கி வருகிறோம்.
போட்டித் தேர்வில் பங்கேற்கும் அளவிற்கு மாணவ பருவத்திலேயே பொது அறிவை வழங்கி தயார்படுத்தி வருகிறோம். நீட், ஜெ.இ.இ., தேர்வுகளுக்கு தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் 10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவி திவ்யா, 592, மாணவர் செந்தமிழ்ச்செல்வன் 591, அருண்குமார் 590 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தருண் 495, சுரேஷ் 494, சுஜன், மாணவி சுதாசினியா 492 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
இதற்கு காரணம் திறமையான ஆசிரியர்கள், ஆய்வுக் கூடங்கள், கம்ப்யூட்டர் லேப், நுாலகம், நேர்த்தியான டிஜிட்டல் வகுப்பறை, இயற்கை சூழலை ஏற்படுத்தி தரமான கல்வி போதிக்கப்படுகிறது. இவ்வாறு தாளாளர் முருகன் கூறினார். பள்ளி முதல்வர் இந்திரா உடனிருந்தார்.