/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 12, 2025 12:42 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் வராததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை, ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.ஆர். குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மழை பெய்ததால் அடுத்த சில மணி நேரங்களில் கலைந்து சென்றனர். அப்பகுதியில் போதிய அளவிற்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.