/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
ADDED : மே 20, 2025 06:39 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே தொடர் மழையால் தற்காலிக தரைபாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் கயிற்றை கட்டிக்கொண்டு ஒரு கரையில் இருந்த மறு கரைக்கு ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தாவடிப்பட்டு பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கால் தாவடிபட்டு ஆற்றில் இருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கிராம மக்கள் கயிறு கட்டி அதன் மூலம் அடித்துச் செல்லும் ஆற்று நீரை கடந்து செல்கின்றனர்.
தாவடிப்பட்டு ஆற்றில் நிரந்தர பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.