/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் துவங்க...எதிர்பார்ப்பு; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் துவங்க...எதிர்பார்ப்பு; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் துவங்க...எதிர்பார்ப்பு; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் துவங்க...எதிர்பார்ப்பு; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை
கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் துவங்க...எதிர்பார்ப்பு; குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 13, 2025 07:05 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமப்புறங்களில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் மற்றும் அசாம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்களுக்கும் - போலீசாருக்கு இடையே நல்லுறவு ஏற்படும் வகையிலும், கடந்த 2021ம் ஆண்டு, 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' என்ற கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 4 - 5 கிராமங்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, அனைத்து கிராமங்களிலும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி, அந்த பகுதிக்கென நியமிக்கப்பட்ட காவலர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், ஊரில் பொது இடங்களில் போலீசார் புகைப்படம், பெயர், தொடர்பு எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு, 'வாட்ஸ்ஆப்' குழு துவங்கப்பட்டது.
ஊரில் நடைபெறும் திருவிழா, விளையாட்டு போட்டி, பிரச்னைகள், அசம்பாவிதம் குறித்த தகவலை பொதுமக்கள் வாட்ஸ்ஆப் குழுவில் பதிவேற்றம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமங்களில் சிறிய பிரச்னைகள் நடந்தால் கூட போலீசாருக்கு உடனடியாக தகவல் கிடைத்துவிடும். பிரச்னைகள் குறித்து தகவலறியும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, பிரச்னையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
காலப்போக்கில் இந்த திட்டம் முறையாக செயல்படவில்லை. போலீசார் பலர் பணிமாறுதல் பெற்று வேறு போலீஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறு போலீசார் நியமிக்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் நடைபெறும் பிரச்னைகள், குற்ற சம்பவங்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவதில்லை. குறிப்பாக, அனைத்து போலீஸ் நிலையிலும் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதும் முக்கிய பிரச்னையாக உள்ளது.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கூடுதல் போலீசாரை நியனம் செய்வதுடன், செயலிழந்து கிடக்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.