/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., ஆட்சியில் சாலை பணிகள் வேகம் வசந்தம் கார்த்திகேயன் பெருமிதம் தி.மு.க., ஆட்சியில் சாலை பணிகள் வேகம் வசந்தம் கார்த்திகேயன் பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில் சாலை பணிகள் வேகம் வசந்தம் கார்த்திகேயன் பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில் சாலை பணிகள் வேகம் வசந்தம் கார்த்திகேயன் பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில் சாலை பணிகள் வேகம் வசந்தம் கார்த்திகேயன் பெருமிதம்
ADDED : ஜூன் 29, 2025 12:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., ஆட்சியில் தான் அதிக சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, தெரிவித்துள்ளார். வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி நகராட்சி மிகவும் நெரிசல் நிறைந்த பகுதி. கடந்த 40 ஆண்டுகாலமாக மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது புறநகர் பஸ்நிலையம், ரிங் ரோடு மற்றும் பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது, அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
அதேபோல் மூன்று திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலைக்கும், தியாகதுருகம் - திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை - திருக்கோவிலுாருக்கும் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சாலை வசதிகள் செய்யப்பட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் உள்ளது. மேலும், ரூ.150 கோடியில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. 'ரிங் ரோடு' குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் 150 ேஷர் ஆட்டோகளுக்கு, ஒப்புதல் வழங்கினால் போக்குவரத்து எளிதாகும். நகர பகுதி விரிவடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும், புதிய பொறியியல் கல்லுாரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசினார்.