ADDED : ஜன 08, 2024 06:06 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார்.
இணைச் செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் அலமு முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை வி.ஏ.ஓ.,க்களை மட்டுமே வைத்து முடிப்பதை கண்டிப்பது. டிஜிட்டல் கிராப் சர்வே பணி செய்திட தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
டெக்கனிக்கல் அசிஸ்டண்ட் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வட்ட துணைத்தலைவர் தனபால் நன்றி கூறினார்.
சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.