/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் 'ஜரூர்' நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் 'ஜரூர்'
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் 'ஜரூர்'
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் 'ஜரூர்'
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் 'ஜரூர்'
ADDED : ஜூன் 04, 2025 09:30 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் நகராட்சி அலுவலகம், அரசு பழைய மருத்துவமனை வளாகம் என அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது.
இதனால் நோயாளிகள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பாதிப்பிற்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இதற்கென இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் கட்டுமான பணி துவங்கியது.
ரூ.1.2 கோடி மதிப்பில் சிகிச்சை அறை, உள் நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.