/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உளுந்துார்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறப்பு உளுந்துார்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறப்பு
உளுந்துார்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறப்பு
உளுந்துார்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறப்பு
உளுந்துார்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறப்பு
ADDED : ஜூன் 21, 2025 03:46 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
உளுந்துார்பேட்டையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு
முன் தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சென்னை சாலை, மார்க்கெட் கமிட்டி அருகே, அமைக்கப்பட்ட கல்லுாரியை தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் குத்து விளக்கேற்றி வைத்தனர். நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார்.
சாரதா பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச பிரியா அம்பா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், சி.இ.ஓ., கார்த்திகா, நகராட்சி கமிஷனர் புஸ்ரா, பி.டி.ஓ., ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன் ராஜவேல், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வசந்தவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், தி.மு.க., மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் டேனியல்ராஜ், கலாசுந்தரமூர்த்தி, மாலதி இராமலிங்கம், ராஜேஸ்வரிசரவணன், செல்வகுமாரி, மாவட்ட கவுன்சிலர்கள் பிரியாபாண்டியன், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.