/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்விரோதம் காரணமாக லாரியை கடத்திய 2 பேர் கைது முன்விரோதம் காரணமாக லாரியை கடத்திய 2 பேர் கைது
முன்விரோதம் காரணமாக லாரியை கடத்திய 2 பேர் கைது
முன்விரோதம் காரணமாக லாரியை கடத்திய 2 பேர் கைது
முன்விரோதம் காரணமாக லாரியை கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2025 12:17 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் முன்விரோதத்தில் லாரியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாரிகண்ணு மகன் மணிகண்டன், 25; இவர், தனது லாரியை பழுது நீக்கம் செய்வதற்காக சேலம் - சென்னை புறவழிச்சாலையில் கடந்த 14ம் தேதி நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மணிகண்டனின் மொபைல்போனில் உள்ள ஜி.பி.எஸ்., செயலியில், லாரி தேசிய நெடுஞ்சாலையில் செல்வது போல குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார், ஜி.பி.எஸ்., மூலம் ஆய்வு செய்ததில் லாரி தியாகதுருகம் பகுதியில் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் நேரில் சென்று லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், லாரியை ஓட்டிச் சென்றது, தியாகதுருகம் அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன், 25; பெரியமாம்பட்டு கணேசன் மகன் சீனுவாசன், 31; என்பது தெரிந்தது.
மேலும், லாரி உரிமையாளர் மா.மணிகண்டன் என்பவருக்கும், லாரியை ஓட்டி சென்ற ர.மணிகண்டனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்ததால் லாரியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை கடத்திச் சென்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.