/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டுமனை அளவீடு செய்ய பழங்குடியின மக்கள் மனு வீட்டுமனை அளவீடு செய்ய பழங்குடியின மக்கள் மனு
வீட்டுமனை அளவீடு செய்ய பழங்குடியின மக்கள் மனு
வீட்டுமனை அளவீடு செய்ய பழங்குடியின மக்கள் மனு
வீட்டுமனை அளவீடு செய்ய பழங்குடியின மக்கள் மனு
ADDED : மார் 25, 2025 04:38 AM

கள்ளக்குறிச்சி: பழங்குடியின சமுதாய மக்கள் தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணாபுரத்தை சேர்ந்த பழங்குடியினர் சமுதாய பொதுமக்கள் கொடுத்துள்ள மனு; வாணாபுரத்தில் வசிக்கும் பழங்குடியின சமுதாய மக்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வீட்டுமனை ஒப்படை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை வழங்கி ஒன்றரை ஆண்டிற்கு மேலாகியும் இதுவரை மனைகள் அளக்கப்படவில்லை.
எனவே, தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து அத்துக்காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.