Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் திருநங்கைகள் முற்றுகை போராட்டம்

சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் திருநங்கைகள் முற்றுகை போராட்டம்

சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் திருநங்கைகள் முற்றுகை போராட்டம்

சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் திருநங்கைகள் முற்றுகை போராட்டம்

ADDED : செப் 09, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்; சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திருநங்கைகள் திடீர் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் அடுத்த ஊராங்கனி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி சத்யாவின் தங்கை திருநங்கை ஜெயா,46; காசிநாதனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வேலு என்பவருக்கும் வீட்டு மனை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் வேலு அவரது மகன்கள் முரளி, சுமன், வேலு மனைவி அய்யம்மாள் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டிலிருந்த திருநங்கை ஜெயா, சத்யா ஆகியோரை திட்டி தாக்கினர். இது குறித்து காசிநாதன் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் சத்யா, ஜெயா ஆகியோரை தாக்கிய நபர்களை கைது செய்யாத போலீசை கண்டித்து 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று பகல் 12:00 மணிக்கு சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு 12.20 மணியளவில் கலைந்து சென்றனர். தொடர்ந்து 1 மணிக்கு மீண்டும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமாதனம் செய்தனர். திருநங்கைகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us