/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி வகுப்பறைக்கு அருகில் டிரான்ஸ்பார்மர்; மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம் பள்ளி வகுப்பறைக்கு அருகில் டிரான்ஸ்பார்மர்; மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்
பள்ளி வகுப்பறைக்கு அருகில் டிரான்ஸ்பார்மர்; மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்
பள்ளி வகுப்பறைக்கு அருகில் டிரான்ஸ்பார்மர்; மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்
பள்ளி வகுப்பறைக்கு அருகில் டிரான்ஸ்பார்மர்; மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்
ADDED : செப் 02, 2025 10:07 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வகுப்பறை அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் பொருத்துவதை நிறுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி, வடக்கு வீதியில் அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. இதன் கிழக்கு நுழைவாயில் பகுதியில் கபிலர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சமீபத்தில் இரண்டு அடுக்கு பள்ளி வளாகம் கட்டப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த வகுப்பறை அருகே சாலையோரம் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடக்கிறது. டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டால் 4 மீட்டர் இடைவெளியில் வகுப்பறையின் முதல் தளம் உள்ளது.
டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டால் வகுப்பறை மாணவர்களை பாதிக்கும் என்பதால் வேறு இடத்திற்கு மாற்ற பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் திருக்கோவிலுார் மின் வாரிய அலுவலகத்தில் ஆசிரியர் வில்வபதி உள்ளிட்ட அலுவலர்கள் சென்று மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மின்துறை வேகப்படுத்தி உள்ளது.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மேற்கு புறத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பற்றியதில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தடுப்புகள் தீப்பற்றி எரிந்தது. இரவு நேரத்தில் நடந்த விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பள்ளிக்கு அருகே டிரான்ஸ்பார்மர் பொருத்துவதை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.