/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாரதா மகா வித்யாலயா கல்லுாரியில் பயிற்சி பட்டறை சாரதா மகா வித்யாலயா கல்லுாரியில் பயிற்சி பட்டறை
சாரதா மகா வித்யாலயா கல்லுாரியில் பயிற்சி பட்டறை
சாரதா மகா வித்யாலயா கல்லுாரியில் பயிற்சி பட்டறை
சாரதா மகா வித்யாலயா கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : மார் 25, 2025 04:28 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா மகா வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி செயலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.
கல்லுாரி இணை செயலாளர் ப்ரம்மச்சாரிணி ப்ரேம ப்ராணா மாஜி வாழ்த்துரை வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் வரவேற்றார்.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு கணினி வழி நுட்பங்கள் என்ற தலைப்பின் கீழ் ஒருநாள் பயிற்சி பட்டறை நடத்தினார்.
துறை தலைவர்கள் கனிச்செல்வி, பிரகாஷ், ஒருங்கிணைத்தனர்.
கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சுமதி நன்றி கூறினார்.