ADDED : ஜூலை 04, 2025 02:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலத்தை சேர்ந்த அம்புரோஸ் மகள் பிரிஜித்மேரி,20; இவர் கடந்த ஜூன் 28 ம் தேதி பகல் 12.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.