/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
ADDED : ஜன 02, 2024 11:45 PM

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது.
கச்சிராயபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிலங்களை மீட்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரதராஜ பெருமாள் கோவில் நிலங்களை அளவீடு செய்து, எல்லைகல் நடும் பணி நேற்று நடந்தது.
இதில் கச்சிராயபாளையம் அடுத்த ஊத்தோடை பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 16 ஹெக்டேர் நிலங்களை தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையில், சர்வேயர்கள் சிவராஜன், கபிலன் ஆகியோர் அளவீடு செய்து எல்லைக்கல் அமைத்தனர்.