/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தினமலர் நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது ஏ.கே.டி., பள்ளியில் ஏற்பாடு தினமலர் நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது ஏ.கே.டி., பள்ளியில் ஏற்பாடு
தினமலர் நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது ஏ.கே.டி., பள்ளியில் ஏற்பாடு
தினமலர் நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது ஏ.கே.டி., பள்ளியில் ஏற்பாடு
தினமலர் நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது ஏ.கே.டி., பள்ளியில் ஏற்பாடு
ADDED : செப் 18, 2025 03:53 AM
கள்ளக்குறிச்சி: தினமலர் நாளிதழ் மற்றும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது.
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் மற்றும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள் பெற, விஜயதசமி திருநாளில், கல்வி கற்க துவங்கும் 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடக்கிறது.
கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்து பிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை ஆரம்பித்து' வைக்கும் சிறந்த தருணமிது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., வித்யா சகேத் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் வரும் அக்., 2ம் தேதி சனிக்கிழமை, காலை 9:00 முதல் 11:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை முன்பதிவு செய்து அழைத்து வாருங்கள்.