/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரி மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகம் உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரி மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகம்
உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரி மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகம்
உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரி மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகம்
உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரி மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகம்
ADDED : ஜூலை 01, 2025 01:33 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரியில் மாணவர்களைவிட இரு மடங்கு மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டையில் மார்க்கெட் கமிட்டி அருகே தற்காலிக இடத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறக்கப்பட்டு நேற்று வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரியில் சேர்க்கைக்கான 290 இடங்களில் 203 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இதில் 137 மாணவிகள், 66 மாணவர்கள் என மொத்தம் 203 பேர் சேர்ந்துள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் அதிகளவில் சேர்ந்துள்ளனர்.
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழாவிற்கு, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கல்லுாரிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியர்களை வரவேற்று, நோட்டு பேனா வழங்கினார்.
நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, கல்லுாரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை தி.மு.க., மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நரேஷ் செய்தியிருந்தார்.
விழாவில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், கவுன்சிலர்கள் கலா சுந்தரமூர்த்தி, மாலதி ராமலிங்கம், குருமனோ, சாந்தி மதியழகன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.