/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குப்பை கொட்டும் இடமாக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம் குப்பை கொட்டும் இடமாக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
குப்பை கொட்டும் இடமாக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
குப்பை கொட்டும் இடமாக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
குப்பை கொட்டும் இடமாக மாறிய தியாகதுருகம் மலையடிவாரம்
ADDED : செப் 01, 2025 01:12 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் மலையடிவாரம் குப்பை கொட்டி தீயிட்டுக் கொளுத்துவதால் வரலாற்று நினைவு சின்னங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தியாகதுருகம் நகரின் மையப் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க மலை உள்ளது. திப்பு சுல்தான் கால கோட்டை மற்றும் அக்காலத்தில் பயன்படுத்திய 3 பிரம்மாண்ட பீரங்கிகள் மலை மீது உள்ளது. இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக உள்ளது.
மலையின் தெற்கு பகுதி அடிவாரத்தில் சிலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குப்பை அதிக அளவு சேர்ந்ததும், குப்பையை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் மலையடிவாரத்தில் உள்ள மரங்கள், புதர்கள் கருகி வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தினமும் குப்பைகள் சேகரிக்க வாகனங்கள் சென்றாலும் கூட ஒரு சிலர் தங்கள் வீட்டு குப்பைகளை மலை அடிவாரத்தில் கொட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
குப்பைகளுக்கு வைக்கும் தீ, மலை மீது உள்ள மரங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் வரலாற்று நினைவு சின்னங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. மலையடிவாரத்தில் குப்பை கொட்டுவதை உடனடியாக தடுத்து அங்கு தேங்கி கிடைக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். வரலாற்று நினைவு சின்னங்களை அழிக்கும் வகையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.