ADDED : செப் 07, 2025 11:04 PM

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பன்னிரு சைவத் திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதிலுள்ள 658 பாடல்கள் முழுதும் கோவில் ஓதுவார்கள் நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை படித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகள் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.