/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பா.ஜ., மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகிபா.ஜ., மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகி
பா.ஜ., மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகி
பா.ஜ., மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகி
பா.ஜ., மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகி
ADDED : ஜன 31, 2024 12:09 AM

தியாகதுருகம் : ரிஷிவந்தியத்தில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட பிரபாகரன் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டை சேர்ந்த பிரபாகரனுக்கு பா.ஜ., மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பதவி சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த என் மண், என் மக்கள் நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அதில், ரிஷிவந்தியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பிரபாகரன், மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, முன்னாள் செயற்குழு உறுப்பினர் பச்சையாப்பிள்ளை, உள்ளாட்சித்துறை மாவட்ட செயலாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர் தரணிபிரசாத், கோவிந்தன், சுந்தர், சுப்ரமணி, கோவிந்தராஜ், சதீஷ், ராஜா, லட்சாதிபதி, சின்னதுரை, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.