/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசு வழங்கிய வாலிபர்கள் கைதுசோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசு வழங்கிய வாலிபர்கள் கைது
சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசு வழங்கிய வாலிபர்கள் கைது
சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசு வழங்கிய வாலிபர்கள் கைது
சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசு வழங்கிய வாலிபர்கள் கைது
ADDED : ஜன 10, 2024 11:27 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு பரிசுகள்(அவார்டு) வழங்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பத்தை சேர்ந்த செல்வம் மகன் ஓம்ராஜ்,20; ஈசாந்தை கிராமத்தை சின்னையன் மகன் பிரசாந்த்,24; கரடிசித்துாரை சேர்ந்தவர் பொன்னி வளவன்.
இவர்கள் மூவரும் சேர்ந்து எவ்வித அனுமதியும் இன்றி, கடந்த டிச., 17 ம் தேதி மாலை 4 மணிக்கு தனியார் பள்ளி ஒன்றில் விழா நடத்தி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்கள் என்று 171 பேருக்கு 'டிஜிட்டல் அவார்டு' என்ற பெயரில் பரிசுகள் வழங்கியுள்ளனர்.
இதனையறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், விழா தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். அதில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம், ஆபாசமாக பேசுதல், கேலி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்களை பொது இடத்தில் செய்து சோஷியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிடும் நபர்களை தேர்வு செய்து பரிசு வழங்கி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து ஓம்ராஜ், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.