ADDED : ஜன 05, 2024 06:24 AM
சங்கராபுரம் : தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அரசானை 243 ஐ திரும்ப பெற வேண்டும். பழையமுறையில் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். அரிகரன், தமிழரசி, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். தேவேந்திரன் நன்றி கூறினார்.