Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/உணவு, தண்ணீர் வழங்காததால் டேங்கர் லாரி டிரைவர்கள் தர்ணா: ஆசனூர் சிப்காட்டில் பரபரப்பு

உணவு, தண்ணீர் வழங்காததால் டேங்கர் லாரி டிரைவர்கள் தர்ணா: ஆசனூர் சிப்காட்டில் பரபரப்பு

உணவு, தண்ணீர் வழங்காததால் டேங்கர் லாரி டிரைவர்கள் தர்ணா: ஆசனூர் சிப்காட்டில் பரபரப்பு

உணவு, தண்ணீர் வழங்காததால் டேங்கர் லாரி டிரைவர்கள் தர்ணா: ஆசனூர் சிப்காட்டில் பரபரப்பு

ADDED : ஜன 03, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை : ஆசனுார் சிப்காட்டில் உணவு, தண்ணீர் வழங்காததால் டேங்கர் லாரி டிரைவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் சிப்காட் தொழிற்சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல் பிடிப்பதற்காக நேற்று காலை 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சிப்காட் தொழிற்சாலைக்கு வந்திருந்தன. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய பெட்ரோலிய குழாய் முணையத்தை பிரதமர் மோடி திருச்சியில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி டிரைவர்களுக்கு ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில் உணவு ,குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

இதனால் டேங்கர் லாரி டிரைவர்கள், கிளினர்கள் நேற்று அதிகாலை முதலே சிப்காட் தொழிற்சாலை யில் லாரிகளை நிறுத்தி வைத்துவிட்டு பெட்ரோல், டீசல் பிடிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் நேற்று மதியம் 3:00 மணி வரையும் இந்தியன் ஆயில் நிறுவனம் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவில்லை. இதனால் பல மணி நேரம் பசியோடு காத்திருந்த டிரைவர்கள், கிளினர்கள் தனியார் கேண்டினும் மூடப்பட்டதால் உணவின்றி தவித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த டேங்கர் லாரி டிரைவர்கள் நேற்று மதியம் 3:00 மணி அளவில் சிப்காட் தொழிற்சாலை நுழைவு வாயில் பகுதியில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டேங்கர் லாரி டிரைவரான உளுந்துார் பேட்டை அடுத்த பகுதியை சேர்ந்த சந்திரபாலன், 45; மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்த டிரைவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீ சார் டிரைவர்களிடம் பேச்சு வார்தை நடத்தி அனை வரையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் உளுந்துார்பேட்டை, ஆசனுார் சிப்காட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us