/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கடைக்குள் புகுந்த கரும்பு டிராக்டர் ட்ரெய்லர் கடைக்குள் புகுந்த கரும்பு டிராக்டர் ட்ரெய்லர்
கடைக்குள் புகுந்த கரும்பு டிராக்டர் ட்ரெய்லர்
கடைக்குள் புகுந்த கரும்பு டிராக்டர் ட்ரெய்லர்
கடைக்குள் புகுந்த கரும்பு டிராக்டர் ட்ரெய்லர்
ADDED : செப் 09, 2025 09:25 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ட்ரெய்லர் ஹார்டுவேர்ஸ் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிசந்தல் கிராமத்தில் இருந்து கீழத்தாழனுார் சர்க்கரை ஆலைக்கு நேற்று முன்தினம் மாலை கரும்பு ஏற்றிய டிராக்டர் ட்ரெய்லர் சென்று கொண்டிருந்தது. அரும்பாக்கம் புறவழிச்சாலை திருப்பம் அருகே சென்ற போது, டிராக்டர் மட்டும் கழன்று தனியாக சென்று விட்டது.
பின்னால் இருந்த கரும்புடன் கூடிய ட்ரெய்லர் நேராக நெல்லை பார்வதி ஸ்டீல் கடைக்குள் புகுந்து மோதி நின்றது. இதில் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த பொலிரோ மினி சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ ஒன்றும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக கடைக்குள் இருந்தவர்கள் காயம் ஏதும் இன்றி தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.