ADDED : செப் 22, 2025 11:28 PM

திருக்கோவிலுார், ; தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கை மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் திருக்கோவிலுாரில் நடந்தது.
பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க பொருளாளர் பழனி தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநிலத் தலைவர் வேல்மாறன், மத்திய கமிட்டி உறுப்பினர் ஜோதிராமன், கறிக்கோழிகள் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கரும்புக்கான விலையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்திப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் குண்டுரெட்டியார், நிர்வாகிகள் கோபால், பலராமன், அருள்தாஸ், தாண்டவராயன், குருநாதன் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மாநாடு நடந்தது. இதில் கரும்பு டன் ஒன்றுக்கு 5,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 2013 - 17ம் ஆண்டுகளில் தரவேண்டிய எஸ்.ஏ.பி., பாக்கி தொகை 1,200 கோடியினை தமிழக அரசும், சர்க்கரை துறை ஆணையமும் பெற்று தர வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு எதிரான ரங்கராஜன் குழு பரிந்துரைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
சங்கத் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் அமரஜோதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.