/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 23, 2024 10:21 PM

கள்ளக்குறிச்சி : தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தரணி சர்க்கரை ஆலை சங்க செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் சாந்தமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தரணி சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தியாகதுருகம் அடுத்த கலைநல்லுார் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் அரசு பெற்றுத் தர வேண்டும். கரும்புக்கான வெட்டுக்கூலி யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.