/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் உபகரணங்கள்விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் உபகரணங்கள்
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் உபகரணங்கள்
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் உபகரணங்கள்
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் உபகரணங்கள்
ADDED : பிப் 23, 2024 11:55 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு தார்ப்பாய், மின் தெளிப்பான், கடப்பாரை, களைக்கொத்து, கதிர் அரிவாள், மண் வெட்டி, இரும்பு தட்டு உள்ளிட்ட வேளாண் உபகரண தொகுப்புகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக தங்களின் ஆதார் அட்டை, புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சிட்டா ஆகிய ஆவணங்களை வழங்கி மானிய விலையில் பெற்று பயனடையலாம்.
நிலம் இல்லா கூலித் தொழிலாளிகள், நுாறு நாள் வேலை அடையாள அட்டை நகலை வழங்கி கருவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.